தியேட்டரில் படங்களை பார்க்கும் மக்களை விட ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்போர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக புதுப்படங்களின் ஓடிடி உரிமையை கோடிக்கணக்கில் விற்பனை ஆகிறது. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
27
Vettaiyan
வேட்டையன்
நவம்பர் மாதம் முதல் படமாக ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ஓடிடிக்கு வருகிறது. ஞானவேல் இயக்கிய இப்படம் போலி என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வருகிற நவம்பர் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
37
Devara
தேவரா
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன படம் தேவரா. இப்படத்தை கொரட்டல சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
47
SIR movie
சார்
விமல் நடிப்பில் கல்வியை மையமாக வைத்து உருவான படம் சார். இப்படத்தை போஸ் வெங்கட் தயாரித்து இருந்தார். கடந்த அக்டோபர் 18ந் தேதி திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஓடிடிக்கு வருகிறது.
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இப்படம் தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து நவம்பர் மாத இறுதியில் இப்படம் ஓடிடிக்கு வர உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
67
Amaran
அமரன்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதன் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் இறுதியில் இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
77
Bloody Beggar
பிளெடி பெக்கர்
நெல்சன் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிளெடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதன் பின்னர் நவம்பர் மாத இறுதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.