கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் தான் கேப்ரியல்லா செல்லாஸ். இவர் சுந்தரி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரியல்லா, அதில் தொகுப்பாளினி டிடி போல் சிரித்துக் காட்டி பேமஸ் ஆனார். பின்னர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார் கேப்ரியல்லா.
25
sundari Serial Heroine
இதையடுத்து சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நயன்தாரா உடன் ஐரா படத்தில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இருப்பினும் சினிமாவில் பெரிய அளவில் ரோல் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய கேப்ரியல்லாவுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் முதல் சீசன் 2023-ல் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதிலும் கேப்ரியல்லா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலும் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் நடிகை கேப்ரியல்லா தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது.
45
Sundari Serial Gabriella Sellus
நடிகை கேப்ரியல்லா சுருளி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் கேப்ரியல்லா குறும்படங்களில் நடித்தபோது அதில் சுருளி கேமராமேனாக பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இவர்கள் இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் கேப்ரியல்லா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தபோதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் சுருளி.
55
Gabriella sellus Husband
அப்படி இருக்கையில் கேப்ரியல்லா கணவரை பிரிந்துவிட்டதாக பரவி வரும் தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கேப்ரியல்லா சீரியல் நடிப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை கேப்ரியல்லா தரப்பில் இருந்து இதுவரை இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடப்படவில்லை என்பதால் வழக்கம்போல் பரவும் வதந்திகளில் இதுவும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.