கூலி நிலைமை என்ன? ஸ்ருதியின் அதிரடி செயலால் குழப்பத்தில் லோகேஷ் கனகராஜ்!

First Published | Oct 25, 2024, 11:23 AM IST

கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதி ஹாசன், அப்பாவையே ஓவர் டேக் செய்யும் படி... சில முடிவுகளை எடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து விலகியுள்ள சம்பவம் லோகேஷ் கனகராஜை குழப்பமடைய செய்துள்ளது.
 

Shruti Haasan

தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர நாயகியாக இருக்கும்  ஸ்ருதி ஹாசன் கடைசியாக தெலுங்கில் பிரபாஸுடன் 'சலார்' படத்தில் நடித்திருந்தார். 30 வயதை கடந்த பின்னரும், தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் பீக்கில் உள்ளது. மேலும் தற்போது தமிழிலும் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
 

Shruti Haasan movie

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் டோலிவுட் நடிகர் அடிவி சேஷ் ஜோடியாக 'டெக்காய்ட்' என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். கடந்த ஆண்டு இந்த படம் துவங்கப்பட்ட போது,  டீசரில் ஸ்ருதிஹாசன் பெயர் புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது. உணர்ச்சிபூர்வமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்திலிருந்து திடீரென ஸ்ருதி ஹாசன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையோடு தான் ஷாரிக்கை திருமணம் செய்தேன்! கண்ணீரோடு ரியாஸ் கான் மருமகள் கூறிய பகீர் தகவல்!

Tap to resize

Shruti Haasan quit 2 movies

இந்த படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால் காரணம் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கதையில் நேர்ந்த மாற்றம் காரணமாக ஸ்ருதி ஹாசன் விலகியதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் உருவாக்கப்படும் விதம் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை என டோலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது. டெக்காய்ட் படக்குழுவும் ஸ்ருதி ஹாசன் விலகுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Shruti Haasan and Rajinikanth

மறுபுறம், சென்னை ஸ்டோரி என்ற படத்திலிருந்தும் ஸ்ருதி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதி ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை விட்டு ஏன் விலகினார் என்பது தெரியவில்லை. மேலும் இவரின் கைவசம் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நடித்து வரும் கூலி படம் மட்டுமே உள்ள நிலையில், இந்த படத்தில் இருந்தும் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரேவதியா இது? முடியெல்லாம் நரைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

coolie movie

இப்படி ஒரு தகவல் கசிந்துள்ளதால்... இதுவரை ஸ்ருதியின் நிலைப்பாடு குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், கூலி நிலை என்ன? என்று லோகியும் கொஞ்சம் கலக்கத்தில் தான் உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது.

Latest Videos

click me!