மீண்டும் தந்தை ஆனார் இசையமைப்பாளர் டி இமான் - குவியும் வாழ்த்து

Published : Oct 25, 2024, 08:09 AM IST

Music Director D Imman : இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2022-ம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் தற்போது மீண்டும் தந்தை ஆகி இருக்கிறார்.

PREV
14
மீண்டும் தந்தை ஆனார் இசையமைப்பாளர் டி இமான் - குவியும் வாழ்த்து
D Imman

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் என்றாலே இயக்குனர்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யும் இசையமைப்பாளராக இமான் இருக்கிறார். நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் தொடங்கிய இமானின் திரைப்பயணம், 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இமான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிளெசிகா, வெரோனிகா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

24
Music Director D Imman

சுமார் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இமான் - மோனிகா ஜோடி கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களின் பிரிவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என்றும் பேச்சு அடிபட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக டி இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மோனிகாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற 6 மாதங்களில் டி இமான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகத்தை மறக்கவும் மாட்டேன்.. மன்னிக்கவும் மாட்டேன் - SK மீது கடும் கோபத்தில் டி.இமான்

34
D Imman

அவர் இரண்டாவதாக உபால்டு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. உபால்டுவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த நிலையில் தான் இமானை கரம்பிடித்தார் உபால்டு. இவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்னர் ஜோடியாக பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

44
D Imman Adopted Child

அந்த வகையில் கடந்த ஆண்டு நெய்வேலியில் வீடு இன்றி கஷ்டப்பட்ட நரிக்குறவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உதவினார். இந்த நிலையில், தற்போது கண் பார்வையற்ற தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளார் டி இமான். அந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில், இரண்டாவதாக குழந்தை பிறந்ததால அதை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டதை அறிந்த இமான், அந்த தம்பதியின் சம்மதத்தோடு அவர்களின் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் தந்தையாகி உள்ள இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... நரிக்குறவர் குடும்பங்களுக்கு 6 வீடு... ரியல் கர்ணனாக மாறி இசையமைப்பாளர் டி.இமான் செய்த உதவி- குவியும் பாராட்டு

click me!

Recommended Stories