முதல் முறையாக பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகர் பாபி தியால் நடிகை திஷா பட்டாணி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கே இ ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். உலக அளவில் நிச்சயம் இந்த திரைப்படம் 2000 கோடி ரூபாயாவது வசூல் செய்யும் என்று மிகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கும் ஞானவேல், படத்தின் பல காட்சிகள் Goosebumps வரவழைக்கும் காட்சிகளாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் பிரமோஷனல் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா தன்னுடைய மெகா ஹிட் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.