ஆனால், அப்படி 20 டேக் எடுத்துக்கொள்ள காரணம் அல்ல வேறு ஒரு வித்தியாசமான காரணத்தால் தான் சுமார் 20 டேக்குகள் அந்த பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 1957ம் ஆண்டு, அதாவது பி சுசிலா மெல்ல மெல்ல பாடகியாக உருவெடுத்து வந்த வருடம் அது. அப்போது இயக்குனர் பி.ஆர் பந்தலு இயக்கத்தில், நீலகண்டனின் எழுத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் தான் "தங்கமலை ரகசியம்". அப்பொழுதே பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு, மெகா ஹிட் ஆன திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள், இதில் பி சுசீலா பாடிய பாடல் தான் "அமுதை பொழியும் நிலவே" என்கின்ற பாடல். சுசிலாவின் கலை வரலாற்றில் அவருக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த பாடல் இதுதான்.