ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் கார்த்தி ஆகியோர்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின்
"மோஸ்ட் வான்டெட்" இயக்குனர் இவர் தான் என்றால் அது கொஞ்சம் கூட மிகையல்ல. அதிலும் குறிப்பாக தன்னுடைய "லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்" என்கின்ற விஷயத்தை வைத்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் இவர் கவர்ந்து வருகிறார். கைதி திரைப்படத்தில் தொடங்கிய இந்த சினிமாடிக் யுனிவர்ஸ், இறுதியாக லியோ திரைப்படம் வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கைதி 2 திரைப்படமும் மிகப்பெரிய சினிமாடிக் யூனிவெர்ஸ் படமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல திரை உலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.