ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே ஓடிய திரைப்படங்கள் எத்தனையோ உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ராமராஜன், கேப்டன் விஜயகாந்த், மைக் மோகன் என்று, இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் பல சூப்பர் ஹிட் ஹீரோக்களின் தனிபட்ட சினிமா வாழ்க்கையில், இசை மூலமாக மிக முக்கிய பங்கு வகித்தவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.