இதைத்தொடர்ந்து கை கொடுக்கும் கை, புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், உன்னை நான் சந்தித்தேன், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, உதய கீதம், பகல் நிலவு, குங்குமச்சிமிழ், என தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். மிகக் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிய ரேவதி... சில கன்னட படங்கள் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த நடிகை ரேவதி, முன்னணி நடிகையாக இருக்கும் போதே 1986 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான, சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிட்டு.. 3 புதிய தொடர்களை களமிறக்கும் சன் டிவி!