அஜித்துடன் சண்டையா? குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பிய திரிஷா!

First Published | Oct 24, 2024, 2:04 PM IST

Good Bad Ugly Trisha : ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்து திடீரென கிளம்பி நடிகை திரிஷா சென்னை வந்துள்ளார்.

Good Bad Ugly Trisha

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு தற்போது 41 வயது ஆகிறது. இருந்தாலும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் திரிஷா, சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். பொதுவாக ஹீரோயின்கள் 40 வயதை கடந்துவிட்டாலே அவர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். ஆனால் திரிஷா, 41 வயதிலும் இளமை ததும்ப ததும்ப இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன.

Vidaamuyarchi Trisha

நடிகை திரிஷா நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார் திரிஷா. தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இதன் ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... எல்லாருக்கும் திரிஷாவை பிடிக்கும்; ஆனா அவருக்கு ரொம்ப பிடிச்ச நடிகைகள் யார் தெரியுமா?

Tap to resize

Ajith Trisha

அங்கு அஜித், திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் இருந்து திடீரென கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் திரிஷா. குட் பேட் அக்லி படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் அவர் சென்னை திரும்பினாரா அல்லது அஜித்துடன் ஏதாவது பிரச்சனையா என்று பல்வேறு கேள்விகள் உலா வந்தன. ஆனால் அவர் திடீரென சென்னை வந்ததற்கான உண்மை காரணமே வேறு என கூறப்படுகிறது.

Trisha

திரிஷா சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக தான் நடிகை திரிஷா சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த விளம்பர ஷூட்டிங்கில் நடித்து முடித்த பின்னர் அவர் மீண்டும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யாரு தெரியுமா?

Latest Videos

click me!