இலக்கணப் பிழையோடு பா.விஜய் எழுதிய பாடல்; தேசிய விருது வென்ற கதை தெரியுமா?

Published : Oct 24, 2024, 01:06 PM IST

Lyricist Pa Vijay Song : கவிஞர் பா விஜய் இலக்கணப் பிழையோடு எழுதிய பாடல் ஒன்று தேசிய விருது வென்றுள்ளது. அப்பாடலில் உள்ள பிழை என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
இலக்கணப் பிழையோடு பா.விஜய் எழுதிய பாடல்; தேசிய விருது வென்ற கதை தெரியுமா?
Pa Vijay

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்கள் வெகு சிலரே. முதன்முதலில் தமிழ் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் கண்ணதாசன். குழந்தைக்காக என்கிற படத்தில் இடம்பெற்ற ‘தேவன் வந்தான்’ என்கிற பாடலுக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதையடுத்து வைரமுத்துவுக்கு தான் அதிக தேசிய விருதுகள் கிடைத்தன. அவர் இதுவரை 7 தேசிய விருதை வாங்கி இருக்கிறார். அதிக தேசிய விருது பெற்ற பாடலாசிரியரும் வைரமுத்து தான்.

24
Lyricist Pa Vijay

வைரமுத்துவுக்கு முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக தேசிய விருதை வென்றிருக்கிறார். வைரமுத்துவுக்கு அடுத்தபடியாக அதிக தேசிய விருது வென்ற தமிழ் பாடலாசிரியர் என்றால் அது நா.முத்துக்குமார் தான். அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு தங்கமீன்கள் படத்தில் ஆனந்தயாழை பாடலை எழுதியதற்காகவும், 2014-ம் ஆண்டு சைவம் படத்தில் அழகு பாடலை எழுதியதற்காகவும் தேசிய விருது வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!

34
Autograph Movie Song

கண்ணதாசன், வைரமுத்து, நா முத்துக்குமாரை தொடர்ந்து தேசிய விருது வாங்கிய மற்றொரு கவிஞர் என்றால் அது பா.விஜய் தான். இந்த நான்கு பாடலாசிரியர்கள் தான் இதுவரை தமிழ் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கி உள்ளனர். இதில் பா.விஜய் கடந்த 2004-ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்கிற பாடலை எழுதியதற்காக தேசிய விருதை பெற்றார்.

44
Pa Vijay's ovvoru pookalume Song

ஆனால் பா.விஜய் எழுதிய இந்தப் பாடல் இலக்கண பிழை கொண்டது என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பாடலின் முதல் வரியான ஒவ்வொரு பூக்களுமே என்பதே இலக்கணப் பிழையோடு கூடிய வரி தான். அதில் ஒவ்வொரு என்பது ஒருமை, அதன் தொடர்ச்சியாக வரும் வார்த்தையும் ஒருமையில் தான் இருக்க வேண்டும். ஆனால் பூக்களுமே என்று பண்மையில் எழுதி இருப்பார் பா.விஜய். இலக்கணப் படி பார்த்தால் ஒவ்வொரு பூவுமே என்று தான் எழுதியிருக்க வேண்டும். இப்படி அவர் இலக்கணப் பிழையோடு எழுதியும் அப்பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அட நம்புங்கப்பா.. நடிகர் சூர்யா சொந்த குரலில் இத்தனை பாடல்களை பாடியிருக்காராம்!

click me!

Recommended Stories