இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், தன்னுடைய மனைவியை ஹனிமூனுக்கு அழைத்து சென்ற போது கூட, பக்கத்து அறையில் திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்ததாக, பிரபல நடிகரும், ஏ ஆர் ரஹ்மான் மனைவியின் சகோதரியின் கணவருமான நடிகர் ரகுமான் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளரான, ஏ ஆர் ரஹ்மான் இரண்டு, ஆஸ்கர் விருதுகளை வென்று உலக சினிமாவையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றவர்.
26
AR Rahman Awards
குறிப்பாக இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்கிற ஆங்கில திரைப்படம் தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்தை. மேலும் மத்திய அரசின் பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். தன்னுடைய முதல் படமான ரோஜா திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருதை வென்ற ஏ ஆர் ரஹ்மான், இதைத்தொடர்ந்து ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, புதிய முகம், திருடா திருடா, உழவன், டூயட், காதலன், கருத்தம்மா, மே மாதம், உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மிக குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ள ஏ ஆர் ரஹ்மான்... ஏராளமான ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். கலைஞர் வரிகளில் உருவான "செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலுக்கும் இசையமைத்த பெருமை ஏ ஆர் ரஹ்மானையே சேரும். அதேபோல் காதல் வைரஸ், பிகில், மாமன்னன், அயலான், போன்ற படங்களில் கேமியோ ரோலில் தோன்றியிருப்பார்.
46
Actor Rahman
இசையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய இசை பணியின் மீது அயராது அர்ப்பணிப்பு கொண்டவர் என்பதை தெரிவிக்கும் விதமாக ,ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானுவின் உடன் பிறந்த சகோதரியின் கணவரான நடிகர் ரகுமான் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் இதுவரை யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் மனைவி, ரஹ்மான் மனைவியை விட மூத்தவர் என்றாலும்... அவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து தான் சாய்ரா பானுவுக்கு திருமணம் ஆனது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் திருமணத்தில் நடிகர் ரகுமான் பங்கு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து இவர் பேசும் போது, "தன்னை விட ஆன்மீகத்தில் அவர் அதிக நாட்டம் கொண்டவர். அவருக்கும், எனக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இருவருமே எப்போதும் இரு துருவங்களாக தான் இருப்போம். அவர் மிகவும் அமைதியானவர். தொழில் மீது எந்நேரமும் அர்ப்பணிப்பு உள்ளவர். அவர் செய்த ஒரு விஷயம் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் உள்ளது.
66
AR Rahman Family
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருமணமாகி அவர் ஹனிமூனுக்காக மலை பிரதேசம் சென்றிருந்தார். அப்போது இரவு நேரத்தில் அவர்களுக்கு நான் போன் செய்தேன். போனை எடுத்த என் அண்ணி தூங்கிக் கொண்டிருப்பதாக சொன்னார். நான் ரஹ்மான் எங்கே என்று கேட்டேன். அதற்காக தெரியாது என்றார். பின்னர் அவர் ரஹ்மானை தேடி சென்று பார்த்த போது தான், ஏ ஆர் ரகுமான்... மற்றொரு அறையில், திரைப்படத்திற்காக மியூசிக் கம்போஸ் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.