பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிட்டு.. 3 புதிய தொடர்களை களமிறக்கும் சன் டிவி!

First Published | Oct 24, 2024, 3:03 PM IST

சன் டிவியில் அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில்... விரைவில் 3 சீரியல்கள் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
 

Serila Update

சன் டிவியில் அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில்... விரைவில் 3 சீரியல்கள் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
 

சன் டிவியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இனியா, சுந்தரி ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளன. அதே போல்... மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலும் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது. 

இப்படி சீரியல்கள் ஒன்றின் பின் ஒன்றாக முடிவுக்கு வர உள்ளதால், 3 சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்ப சன் டிவி தயாராகி உள்ளது. சீரியல்கள் துவங்கும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் மட்டும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரஞ்சனி, ராகவி, மற்றும் உன்னை சரன்னடைத்தேன் ஆகிய தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன.

ஹனிமூன்; மனைவியை தனியே விட்டுவிட்டு பக்கத்துக்கு ரூமில் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன செஞ்சிருக்காரு பாருங்க!

Tap to resize

Ragavi

ராகவி:

ராகவி சீரியலில், வாணி ராணி தொடரில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நீலிமா இசை மற்றும் அருண் குமார் இவருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு பின்னர், சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த 'வானத்தை போல' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்த போது... இவர்களின் ஜோடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ராகவி சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர்.

Unnai Saranadainthen

உன்னை சரன்னடைத்தேன்:

கனா காணும் காலங்கள் சீசன் 3-ல் நடித்து பிரபலமான நடிகர் பரத் மற்றும் அயலி தொடர் நடிகை அபி நக்ஷத்ரா நடிப்பில், சன் டிவியில் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள தொடர் 'உன்னை சரணடைந்தேன்'. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முடிவுக்கு வருவதற்கு முன்னர் இந்த சீரியல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்  என கூறப்படுகிறது.

ரன்னிங் - சேசிங்கோடு எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த வில்லன் நடிகர் அசோகன் காதல் திருமணம்!

Ranjani

ரஞ்சனி:

நட்பை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரின் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் ரெஜினா கதாபாத்திரத்தில் முன்பு நடித்த ஜீவி டிம்பிள் நாயகியாக நடிக்க உள்ளார். நான்கு நண்பர்களுக்கும், ஒரு தோழிக்கும் இடையே உள்ள உன்னத நட்பை கொண்டாடும் விதத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல் இந்த தொடர், மல்லி சீரியல் ஒளிபரப்பாகும் 9:30  மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும், மல்லி சீரியலின் நேரம் மாற்றப்பட்டு 10:00க்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!