சமீப காலமாக திரையரங்கில் கவனம் பெறாத படங்களும், ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் 'போகுமிடம் வெகு தூரமில்லை' என்கிற திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் பாராட்டுகளை, படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாகவே பெரிய பட்ஜெட் படங்களை விட, சிறு பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜன் என்பவர் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. அடுத்தடுத்து சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானதால், சரிவர கிடைக்காததாலும், விளம்பரங்கள் யுக்தி கை கொடுக்காததாலும் கவனிக்கப்படாத படமாக மாறியது 'போகுமிடம் வெகு தூரமில்லை'.
24
Pogumidam vegu thooramillai Movie Update
இந்த படத்தில் அமரர் உறுதி ஓட்டுனருக்கும் - நலிந்த கூத்து கலைஞர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் சில சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விமல் நாயகனாக நடிக்க, கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஆடுகளம் நரேன், தீபா சங்கர், சார்லஸ் வினோத், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
திரையரங்கில் கவனிக்கப்படாமல் போன, போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படம் அக்டோபர் 8-ஆம் தேதி, அமேசான் ஓடிடி தளத்தில் பிரைம் தளத்தில் வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
44
Pogumidam Vegu Thooramillai OTT
மேலும் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் டாப் 5- க்குள் இடம்பிடித்துள்ள இந்த படம், இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பாராட்டுகளையும் குவித்து வரும் இந்த படத்தை, பார்த்த நடிகர் விஜய் சேதுபதி மெர்சல் ஆகி, பட குழுவினரை உடனடியாக நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.