
சன் டிவியில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஃபேமிலி டிராமாவாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கயல்'. இந்த தொடரை பி.செல்வம் என்பவர் இயக்கி வரும் நிலையில், 'யாரடி நீ மோகினி', 'கல்யாண முதல் காதல் வரை' போன்ற சீரியல்களில் நடித்த சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.
2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தன்னுடைய குடும்பத்தை காலில் விழ வைக்க நினைக்கும் பெரியப்பாவை எதிர்த்து கயல் எப்படி போராடுகிறார், தன்னுடைய குடும்பத்தை ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றி, அண்ணன், தங்கைகள் மற்றும் தம்பியை எப்படி கரை சேர்கிறார் என்பதே சென்டிமெண்டுடன் பின்னி பிணைந்து கூறி வருகிறார் இயக்குனர்.
கூலி நிலைமை என்ன? ஸ்ருதியின் அதிரடி செயலால் குழப்பத்தில் லோகேஷ் கனகராஜ்!
டி ஆர் பி எல் முதலிடத்தை பிடித்து வரும் இந்த சீரியலில், மீனா குமாரி, வழக்கு எண் முத்துராமன், சுமங்கலி, சந்திரா லட்சுமணன், உமா ரியாஸ் கான், ஐயப்பன், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ஜீவா ராஜேந்திரன், அபிநயா தீபக், கீதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் தமிழில் மட்டும் இன்றி பிற மொழிகளிலும், ஒளிபரப்பாகி வருகிறது.
எப்போது கயல் திருமணம் நடைபெறும்? என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்... ஒரு வழியாக தற்போது கயலின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக தேவிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அதே மருத்துவமனையில் தான் மூர்த்தியும், சிகிச்சை எடுத்து வருவதால்... இதுகுறித்து கயலுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தையோடு தான் ஷாரிக்கை திருமணம் செய்தேன்! கண்ணீரோடு ரியாஸ் கான் மருமகள் கூறிய பகீர் தகவல்!
பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி இந்த சீரியலுக்கு தூணாக இருக்கும் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஒரு எபிசோடுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 30-ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்.
இவரைத் தொடர்ந்து, எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ்... ரூபாய் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெறுவதாக கூறப்படுகிறது. கதாநாயகியை விட கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவி சம்பளம் குறைவு என்பது இதன் மூலம் தெரிகிறது.
விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி, அவருடைய மனைவி தேவியாக நடித்து வரும் நிலா கிரேசி... ஆகியோர் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள். அதேபோல் மூர்த்தி, தர்மலிங்கம், வடிவு ,கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபலங்கள் 12 முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகின்றனர்.
காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி, ஆனந்தி, கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரபலங்கள் ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகின்றனர். இவர்களை தவிர அன்பு, ஆறுமுகம், தனம், ஷாலினி, ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்கள் ரூபாய் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. கயல் சீரியல் பிரபலங்களின் இந்த லேட்டஸ்ட் சம்பள பட்டியல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தாலும், இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிட்டு.. 3 புதிய தொடர்களை களமிறக்கும் சன் டிவி!