நடிகர் விக்ராந்த் மற்றும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா நடிப்பில் வெளியாகியுள்ள 'தீபாவளி போனஸ்' திரைப்படம் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? இல்லையா என்பதை இந்த ட்விட்டர் விமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி போனஸ் ட்விட்டர் விமர்சனம்: இயக்குனர் ஜெயபால் ஜெ. எழுதி - இயக்கிய இந்தப் படத்தை ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்ஷன்ஸ் தீபக் குமார் தாலா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் மரியா ஜெரால்ட் இசையில், கௌதம் சேதுராம் ஒளிப்பதிவில், உருவாகியுள்ள இந்த படத்தை... பார்த்திவ் முருகன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வேட்டையன் வசூல் குறைய துவங்கியுள்ள நிலையில், இந்த வாரம் வெளியாகியுள்ள படங்களில்... 'தீபாவளி போனஸ்' திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
25
Deepavali Bonus
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள தீபாவளி போனஸ், திரைப்படம் ரவி, கீதா மற்றும் அவர்களின் மகன் சச்சின் ஆகியோரைச் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருவிழா நெருங்கும் வேளையில், அந்தக் குடும்பம் நிதி நெருக்கடியால் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தங்களுடைய குழந்தையின் ஆசையை நிறைவேற்ற போராடும்... ஒரு சாமானிய குடும்பத்தை சேர்ந்த அப்பா - அம்மாவின் வலிகளை வெளிக்காட்டியுள்ளது இந்த திரைப்படம்.
ரித்விகா வீட்டு வேலை செய்யும் பெண்ணாகவும், விக்ராந்த் குப்பை அள்ளும் தொழிலாளியாகவும்... மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, படத்தின் கதைக்கு வலு சேர்ந்துள்ளது. திருவிழா சமயத்தில், பல ஏழை குடும்பங்கள் மற்றும் சந்திக்க கூடிய பிரச்னையை இப்படம் பேசியுள்ளது. அதே போல் கஷ்டத்தில் வாழ்ந்த பின்னர் முன்னேறிய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் விதமாக இப்படத்தில் கதை உள்ளதாக தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்திற்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
45
Deepavali Bonus Twitter Review
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, நலன் விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம், நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து பார்ப்போம்.
சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா, தீபாவளிபோனஸ் படத்திற்கு [3.25/5] மதிப்பீடு கொடுத்துள்ளார். மேலும் மதுரையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தைப் பற்றிய நெஞ்சைத் தொடும் படம்.. தீபாவளி போனஸ் எவ்வளவு முக்கியம்.. அதைப் பெறுவதற்கான போராட்டம்.ரசிகர்களை ஈர்க்கக்கூடிய படம். விக்ராந்த் மற்றும் ரித்விகா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் உண்மையான போராட்டத்தை கண் முன் நிறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் படம் குறித்து பேசிய மற்றொரு ரசிகர், இந்த படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் நல்ல படங்களின் பட்டியலில் இன்னொரு நல்ல படம் சேர்க்கிறது. லைட் ஹார்டு ஃபீல் குட் திரைப்படம். நிறைய ஃபீல் குட் மொமென்ட்ஸ்.. நிரயா கிளாப்ஸ். அறிமுக இயக்குனர் ஜெயபாலின் கண்ணியமான, இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்.. கிளைமாக்ஸ் அற்புதம் என தெரிவித்துள்ளார். இந்த வாரம் வெளியான படங்களில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வருவதால், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.