கூலி பட பிஸிக்கு மத்தியில் உருவாகும் "Chapter Zero" - லோகேஷ் வெளியிட்ட தரமான அப்டேட்!

Lokesh Cinematic Universe : "சேப்டர் ஜீரோ" என்கின்ற தன்னுடைய புதிய சினிமாடிக் யுனிவர்ஸ் குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Chapter Zero

இன்று தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறி இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய திரைப்படங்களும், அந்த ஒவ்வொரு திரைப்படங்களை அவர் இணைக்கும் விதமும் தான் பெரிய அளவில் காரணம் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், கார்த்தியின் கைதி திரைப்படத்தில் தொடங்கி தன்னுடைய ஆசாத்திய திறமையால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். ஏற்கனவே லோகேஷின் Cinematic Universeக்குள் "கைதி", "லியோ" மற்றும் "விக்ரம்" ஆகிய மூன்று திரைப்படங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய LCUவின் ஒரு புதிய அத்தியாயம் குறித்து அறிவிப்பை அவர் இப்போது வெளியிட்டுள்ளார்.

'அமரன்' பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்! வெளியானது அச்சத்தில் புரமோ!

Kaithi movie

கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய புதிய முன்னெடுப்புக்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் செய்து வந்தார். கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரு திரைப்படங்களின் இணைப்பாகவும், லியோ திரைப்படத்தின் ரெபெரென்சும் இருக்கும் வண்ணம் புதியது ஒரு கதையை அவர் உருவாக்கி வருகிறார். இதற்கு தற்போதைக்கு "சேப்டர் ஜீரோ" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கைதி திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள், விக்ரம் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புதிய சீரிஸில் இடம்பெறும் என்று அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது. 


Rolex

அது மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜின் இந்த புதிய சேப்டர் ஜீரோ கதையில், தளபதி விஜய் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் சம்பந்தமான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது என்கின்ற சில தகவல்களும் வெளியாகி வருகிறது. 10 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பிரிவியூ காட்சி ஒன்றை விரைவில் லோகேஷ் கனகராஜ் வெளியிடவிருக்கிறார். இது தன்னுடைய LCU சீரிஸின் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

lokesh cinematic universe

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில், ஏற்கனவே அதற்கான முதற்பட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்தில், கூலி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை ஒன்றுக்காக சென்னை வந்த அவர், சுமார் 20 நாள் ஓய்வுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் தன்னுடைய பணிகளை கூலி திரைப்படத்திற்காக தொடங்கி இருக்கிறார்.

ஆதவன்; சுசீலா தான் பாடணும்னு அடம்பிடித்த சரோஜா தேவி - கடைசியில் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியுமா?
 

Latest Videos

click me!