சன் டிவியில் கடந்த 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் மிஸ்டர் மனைவி. இந்த சீரியலை சுலைமான் என்பவர் ஆரம்பத்தில் இயக்கி வந்த நிலையில், தற்போது ஜவகர் என்பவர் இயக்கி வருகிறார். 450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் 500 எபிசோடுகளை எட்ட உள்ளது.
24
Mr Manivi Serial
இந்த சீரியலில், முதலில் ஷபானா ஷாஜகான் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், பின்னர் அவர் ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து Debjani Modak நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே 'வானத்தைப்போல' சீரியலில் நடித்து பிரபலமானவர்.
ஹீரோவாக பவன் ரவீந்தரா... விக்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அனுராதா, லதா, வெங்கடேஷ், லோகேஷ் பாஸ்கரன், மான்ஷி ஜோஷி, ஜீவா ரவி, சபிதா ஆனந்த், லட்சுமி வாசுதேவன், தரணி, சஞ்சய் குமார் அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
44
Mr Manivi TRP Rating
இந்த சீரியலில் இரண்டாவது நாயகியாக, கவிமலர் என்கிற கதாபாத்திரத்தில் ஸ்மிர்தி காஷ்யபப் நடித்து வந்தார். தற்போது ஒரு சில காரணங்களால், இந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகை கீர்த்தி தான் இவர் ஏற்று நடித்து வந்த கவிமலர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி ஆர் பி-யில் தொடர்ந்து பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல், 500 எபிசோடுகளை கடந்த பின்னர் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.