ஒருவர் தங்களில் வாழ்க்கையில் எத்தனையோ தீபாவளியை கடந்து சென்றாலும், திருமணமான முதல் வருடம் கொண்டாடப்படும், தலை தீபாவளி ரொம்ப ஸ்பெஷல். அப்படி இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில், வணக்கம் தமிழா நிகழ்ச்சி உட்பட ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளர் அஸ்வந்த். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை கண்மணி மனோகரனுக்கும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
211
Avinash - Tresa Mariya
சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' சீரியல் மூலம் அறிமுகமான நடிகரும், டான்சருக்கான அவினாஷ் பள்ளி காலத்தில் இருந்தே, காதலித்து வந்த தன்னுடைய நீண்ட நாள் காதலியான தெரேசா மரியா என்பவரை செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது. தற்போது அவினாஷ் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிற தொடரில் நடித்து வருகிறார். இவருடைய தங்கை அக்ஷிதா 'பாக்கியலட்சுமி' சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவினாஷ் - தெரேசா மரியா ஜோடி இந்த ஆண்டு தங்களின் தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
'வெண்ணிலா கபடி குழு', 'வேங்கை' போன்ற திரைப்படங்களிலும், நாதஸ்வரம், உயிர், மகராசி, போன்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரித்திகா. இவர் தன்னுடன் 'மகராசி' சீரியலில் இணைந்து நடித்த, எஸ் எஸ் ஆரியன் என்பவரை, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரித்திகா ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு, சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்.. இருவரும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதேபோல் எஸ் எஸ் ஆரியன் சீரியல் நடிகை நிவேதித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, விவாகரத்து பெற்றவர். இவர்கள் இருவரும் இந்தாண்டு மீண்டும் தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
411
Arjun Arumugam Wedding
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்னி C /O ராணி என்கிற சீரியலில் நடித்து வந்த நடிகர் அர்ஜூன் ஆறுமுகம், இந்தாண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த புதிய ஜோடியும், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'நீ நான் காதல்' சீரியலில் நடித்து வரும் பிரேம் ஜாக்கோப், கோரிப்பாளையம், சாட்டை, ரப்பர் பந்து, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாசிகா-வை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. இந்த நட்சத்திர ஜோடியும், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
611
viraat - Naveena
'அன்பே வா' சீரியலில் ஹீரோவாக நடித்த விராட், நவீனா என்கிற மேக்கப் ஆர்ட்ஸ்டை கடந்த ஏப்ரல் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணம் ஆகி, 15 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். தன்னுடைய நீண்ட கால காதலியான நவீனாவை தான் திருமணம் செய்ய வேண்டும் என, பல வருடங்கள் தன்னுடைய பெற்றோருடன் பேசாமல் இருந்து சம்மதம் பெற்ற பின்னரே... விராத் நவீனாவை கரம் பிடித்தார். இந்த ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை மகளுடன் கொண்டாட உள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நீ தானே என் பொன்வசந்தம்', 'கனா' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷனா அசோகன். இவர் மருத்துவரும் கூட. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய காதலர் அபிஷேக் என்கிற மருத்துவரை, பெற்றோர் சம்மதத்துடன் தர்ஷனா திருமணம் செய்து கொண்டார்.
811
கண்மணி சீரியல் மூலம் அறிமுகமான சந்தியா, இதைத் தொடர்ந்து சுந்தரி நீயும் சுந்தரும் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு, ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்கிற தொடரில் நடித்து வருகிறார். வழக்கறிஞரான இவர், பிரபல நடன இயக்குனர் சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெற்றோர் முடிவு செய்த திருமணம் என்றாலும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் காதலித்து வருவதாக பல பேட்டிகளில் சந்தியா கூறியுள்ளார். இந்த கியூட் ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
சுந்தரி மற்றும் இலக்கியா சீரியல்களில் நடித்து வரும் அரவிஷ் மற்றும் திருமகள் சீரியல் நடிகை ஹரிகா சாதுவுக்கும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் ஹரிக்காவின் பிறந்தநாளை கோலாகலமாக அரவிஷ் கொண்டாடினார். இந்த நட்சத்திர ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
1011
Surendher - Nivedhitha
திருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தர், அதே சீரியலில் வில்லியாக நடித்த நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் சேர்ந்து அறிவித்தனர். தற்போது நிவேதிதா சீரியலில் இருந்து விலகி இருந்தாலும், சுரேந்தர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடரில் நடித்து வருகிறார். சுரேந்தருக்கு இது முதல் திருமணம் என்றாலும், நிவேதிதா ஏற்கனவே பிரபல சீரியல் நடிகர் எஸ் எஸ் ஆர் ஆரியனை திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். எனவே இது இவருக்கும் இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை வயிற்றில் இருக்கும் குழந்தையோடு கொண்டாட உள்ளனர்.
தொகுப்பாளரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருபவருமான அபிஷேக், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு... அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தன்னுடைய நீண்ட நாள் தோழியான திவ்யா என்பவரை காதலித்து, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.