தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் யானை மற்றும் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்று உள்ளன. இந்தக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று தவெக கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் கூறி இருந்தார். இதையடுத்து அந்த மாநாடு எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.