Tasmac Closed because of TVK Maanadu
தமிழ்நாடு முழுக்க தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு தான். இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
TVK Maanadu
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் நலன் கருதி, அங்கு அவசர உதவிக்காக மொத்தம் 13 கிளீனிக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதுமட்டுமின்றி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாப்பாடு என அனைத்தும் அங்கு தயாரி நிலையில் உள்ளன. இதில் கூடுதல் அம்சமாக மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் ஏதேனும் ரிப்பேர் ஆனால் அதனை தயார் செய்ய அங்கு பஞ்சர் கடை மற்றும் ஒர்க் ஷாப் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்கார் vs தளபதி மாநாடு: ரீலும் ரியலான ஸ்டோரி – சர்காரை மிஞ்சும் விஜய்யின் விக்கிரவாண்டி டிவிகே மாநாடு!
TVK Maanadu in VIkravandi
தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிபோதையில் வந்தால் உள்ளே அனுமதிக்கக்கூடாது என நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவு விடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகமே உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Vijay's TVK Maanadu
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குடிப்பதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதையும் மீறி தவெக மாநாடு நடைபெறும் திடல் அருகே காலை முதல் பீடி, சிக்ரெட் போன்ற பொருட்களை சிலர் விற்பனை செய்து வருகின்றனர். அதனை வாங்கவும் அங்கு கூட்டம் அலைமோதுகிறதாம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கட்டுக்கடங்காத கூட்டம்; காலையிலேயே ஹவுஸ்புல் ஆன தவெக மாநாட்டு திடல்!!