தலைசுற்ற வைத்த கூட்டம்; தவெக மாநாட்டிற்கு வந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்ததால் பரபரப்பு

First Published | Oct 27, 2024, 12:13 PM IST

தவெக மாநாட்டுக்கு வந்தவர்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

TVK Maanadu vikravandi

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநாடு இன்று மாலை விக்ரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்காக 50 ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றில் இருந்தே ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுக்க தொடங்கினர். 

TVK

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் 6 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என யூகிக்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டு அதில் சேர்கள் போடப்பட்டு உள்ளன. மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்கள் சிரமமின்றி உள்ளே செல்ல மொத்தம் 5 நுழைவு வாயில்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாநாடு முடிந்து விரைவாக வெளியே செல்ல 15 வெளியேறும் வழிகளும் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்... விஜய்யின் தவெக மாநாடு எதிரொலி; டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் லீவு!!

Tap to resize

TVK Vijay

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்ய சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பிரம்மாண்ட வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலின் இருபுறமும் இந்த பார்க்கிங் ஏரியாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கார்கள், பஸ், வேன்கள் என மொத்தம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை இந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திக் கொள்ள முடியுமாம். அதுமட்டுமின்றி மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

People Fainted in TVK Maanadu

இது ஒருபுறம் இருக்க மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் சுட்டெறித்து வருவதால் அங்கு குவிந்துள்ள மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் மயங்கி விழுந்தவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கட்டுக்கடங்காத கூட்டம்; காலையிலேயே ஹவுஸ்புல் ஆன தவெக மாநாட்டு திடல்!!

Latest Videos

click me!