தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ள விஜய், அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் அமைந்துள்ள மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தவெக மாநாடு இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது.
24
TVK Vijay
மாநாட்டுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்திருந்தாலும் கூட்டம் அதிகளவில் வந்துள்ளதால் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரே திணறி வருகின்றனர். தவெக மாநாட்டில் 6 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்து வந்தனர். இன்று காலை முதலே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் கூடியதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிக இருப்பதன் காரணமாக அங்கு ஏராளாமனோர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவ உதவியும் வழங்கி வருகின்றனர். தவெக மாநாடு நடைபெறும் பகுதி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை சரிபடுத்தும் பணியில் தன்னார்வலர்களும் காவலர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
44
priyanka and MaKaPa in TVK Maanaadu
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளான பிரியங்கா தேஷ்பாண்டேவும், மாகாபா ஆனந்தும் தான் இந்த தவெக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ளார்களாம். அவர்கள் இருவரும் மாநாட்டு திடலுக்கு வந்து அங்கு தங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.