நடிகர் விஜய் தற்போது விசாகப்பட்டினத்தில் தனது இரு மொழி படமான வாரிசு படத்தின் பிசியாக இருக்கிறார். படத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரபு சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, கிருஷ்ணா, சம்யுக்தா என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
25
varisu
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து மனம் திறந்திருந்தார்., வாரிசு படத்தில் நடித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, படத்தின் கதையை இப்போது வெளியிட முடியாது என்றும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் திரையிடத்தை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். கில்லி, வில்லு படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இருவரும் இப்போது வாரிசு படத்தில் இணைந்துள்ளனர்.
மேலும் அந்த பேட்டியில், ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செல்லத்துடன் பணியாற்றுவதாகவும், இது நீண்ட இடைவெளி என்றும் கூறியுள்ளார். பிரகாஷ்ராஜ் விஜயை தான் செல்லம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் கில்லி படத்தில் தன்னை சுற்றி உள்ளவர்களை அவர் அப்படி தான் அழைத்து இருந்தார். மேலும் வாரிசு ஒரு சுவாரஸ்சியமான படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தில் ராஜு தாயரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் த்ரில்லரான இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகின. விஜயின் 66 ஆவது படமான இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஹைதராபாத் சென்னை என அடுத்தடுத்த படப்பிடிப்புகளை முடித்துள்ள பட குழு தற்போது துறைமுகம் தொடர்பான காட்சிகளுக்காக விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளனர். இறுதியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற போதிலும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது வாரிசு படம் கட்டாய வெற்றியை பெற வேண்டும் என்கிற கனவு அவரது ரசிகர்கள் பற்றிக்கொண்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.