பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். முன்னதாக பின்னணி பாடகி ஆகவும் இந்த படத்தின் மூலம்திரை உலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
26
aditi shankar
சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கிராமத்து நாயகன் கதையை இயக்கும் முத்தையா இயக்கி, இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை அதிதி ஷங்கர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அசத்தியிருந்தது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
46
aditi shankar
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுர வீரன் பாடலை அதிதி சங்கர் தான் பாடியிருந்தார். இந்த பாடலை பாட முதலில் பாடகி ராஜலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான ரெக்கார்டிங் முடிந்து விட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவரது குரல் அகற்றப்பட்டு விட்டு அதிதி ஷங்கரை பாட வைத்ததாக புகார் எழுந்தது. இதனால் சமூக வலைதளத்தில் நடிகைக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பின. பின்னர் ராஜலட்சுமி இது குறித்து அதிதி சங்கரை விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இவர் மதுரை, மலேசியா, கேரளா மற்றும் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாக்களில் பங்கேற்று பிரபலமானார். நாயகியான பின்னர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தனது க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு கலர் சல்வார் அணிந்து இவர் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. துப்பட்டாவை வித்தியாசமாக அணிந்து ஸ்லீவ் லெஸ் சுடிதாரில் கலக்கி யுள்ளார் அதிதி. இந்த போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.