Published : Aug 14, 2022, 08:50 PM ISTUpdated : Aug 14, 2022, 08:52 PM IST
ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை சிம்பு கைவிட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தில் தோன்றியிருந்த சிம்பு தற்போது தனது வெந்து தணிந்தது காடு படத்திற்காக காத்திருக்கிறார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இவர்களது கூட்டணி அமைந்திருந்தது.
தற்போது இவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிராமத்து நாயகனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
24
simbu
இவரது முந்தய வெளியீடான மாநாடு திரைப்படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு சரியான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. பிளாக் பாஸ்டர் படமாக அமைந்த இந்த படத்திற்குப் பிறகு சிம்பு நாயகனாக நடிக்கும் வெந்து தணிந்தது காடு படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் மஹா படத்தில் காமியோவில் தான் சிம்பு நடித்திருந்தார்.
சிம்பு நாயகனாக நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் மாநாடு படம் அளவிற்கும் வெற்றிகளை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு குறித்த ஒரு சுவாரஸ்சிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க சிம்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
34
simbu
ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்களது விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் கொடுத்துள்ளனர். ஆனால் சிம்பு ஒப்புக்கொள்ளவில்லையாம். பிரபல பாலிவுட் நடிகர்கள் பல மதுபான விளம்பரங்களில் நடித்த சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த தலைவலியே தனக்கு தேவையில்லை என சிம்பு ஒதுங்கி கொண்டாராம்.
மதுபான விளம்பரங்களில் தான் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறி இருப்பது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. அதோடு ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை நடிகர் கைவிட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
44
simbu
முன்னதாகா தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் சிம்பு. இதற்கிடையே இவரது தந்தை டி ஆர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று தந்தைக்கு சிகிச்சை அளித்த பின் சமீபத்தில் தான் நாடு திரும்பியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.