இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் கமிட் ஆனார். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் செம்ம குஷியான விக்கி, எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும் என தனது சமூக வலைதள பக்கத்தில் உற்சாகம் பொங்க பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தின் பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், ஷூட்டிங் செல்ல தயாராகி வந்த நேரத்தில் விக்கியின் தலையில் குண்டை தூக்கிப்போட்டது லைகா நிறுவனம். அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் செம்ம அப்செட் ஆன விக்கி, தனது டுவிட்டர் பயோவில் இருந்து ஏகே 62-வை தூக்கிவிட்டு, விக்கி 6 என அதிரடியாக மாற்றினார். இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது 6-வது படத்தை யாரை வைத்து இயக்கப்போகிறார் என கேள்வி எழுந்து வந்தது.
இதையும் படியுங்கள்... நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட... செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார் - வைரல் வீடியோ
அதன்படி விக்கியின் 6-வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலிவுட்டில் ஒரு தகவல் உலாவி வந்தது. இந்நிலையில், சமீபத்திய தகவல் படி அப்படத்தில் மேலும் ஒரு ஹீரோ நாயகனாக நடிக்க உள்ளதாகவும், விக்கி இப்படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த மற்றொரு ஹீரோ வேறு யாருமில்லை, கடந்த ஆண்டு இறுதியில் கோலிவுட்டே மெச்சும் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான். இவருக்கென தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருப்பதால் அவரை தன் படத்தில் நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளாராம் விக்கி. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!