கொல்கத்தாவைச் சேர்ந்த, மாடலான நடிகை ரீமா சென் தெலுங்கு திரையுலகில் 'சித்திரம்' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த ரீமா சென்னுக்கு அடுத்த டுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.