'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து, மிக முக்கிய பிரபலம் ஒருவர் தற்போது விலகி விட்டதாக அவரே கூறியுள்ள தகவல், ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பெரும்பாலான சீரியல்கள் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரையும் கவர்ந்த தொடராக உள்ளது. எனவே, மற்ற தொலைக்காட்சி சீரியல் பிரபலங்களை விட, விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் மிக விரைவாகவே வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
25
அந்த வகையில் விஜய் டிவி மூலம் பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் முன்னணி நடிகர் - நடிகைகளாக உள்ள நிலையில், மாகாபா, ரக்சன், ப்ரியா பவானி சங்கர், புகழ், பாலா, சிவாங்கி, ஜாக்குலின், கவின், ரியோ ஆகியோர் வளர்ந்து வரும் பிரபலமாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து இயக்குனரே விலகி விட்டதாக கூறியுள்ள தகவல் தான் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
45
விஜய் டிவி தொலைக்காட்சியில், சரவணன் மீனாட்சி, கானா காணும் காலங்கள், ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை தொடர்ந்து இயக்கி வருபவர் தான், பிரவீன் பென்னட். இவருடைய சீரியல்கள் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமோ... அதே போல் இவரும் மிகவும் பிரபலம். இவருடன் பணியாற்றுவது, மிகவும் ஜாலியான அனுபவம் என பல சீரியல் பிரபலங்கள் கூறுவது உண்டு.
ஆனால் இவருடைய சீரியலில் இருந்து, நடிகை ரியா விஸ்வநாதன் திடீர் என எவ்வித அறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டது ஏன்? கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்... 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாகவும், எனவே இந்த சீரியலின் நாயகி ஏன்? மாற்றப்பட்டார் என்பது குறித்து தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்த சீரியலை புது இயக்குனர் ஒருவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.