தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்துடன் எடுக்கப்படும் படங்களில் ஆர்வத்துடன் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தற்போது கடல் கொள்ளையனாக நடித்துள்ள திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தை ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.
24
Jayam Ravi
இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
44
'அகிலன்' படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சியஸ் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த சந்தோஷம் ஒளிப்பதிவில், கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான 'பொன்னியின் செல்வன்' மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 'அகிலன்' திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.