விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்னர் நடிகை நயன்தாரா, இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்த அவர், சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக் அப் செய்தார். இதையடுத்து பிரபல நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா மீது நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.