Vikram : பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு விற்பனையான ‘விக்ரம்’ ஓடிடி உரிமை... ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய கமல்

Published : May 06, 2022, 09:19 AM IST

Vikram : கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. 

PREV
14
Vikram : பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு விற்பனையான ‘விக்ரம்’ ஓடிடி உரிமை... ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய கமல்

கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், நரேன், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

24

விக்ரம் படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

34

விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் விக்ரம் படத்திற்கான சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

44

இந்நிலையில், விக்ரம் படம் வெளியாகி 4 வாரத்திற்கு பின் ஓடிடி-யில் வெளியிடுவதற்காக அதன் டிஜிட்டல் உரிமையை ரூ.125 கோடி கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி உள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட்டே 100 கோடி தானாம். தற்போது பட்ஜெட்டைவிட அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமை விற்பனை ஆகி உள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Khatija Rahman : மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படங்கள்

Read more Photos on
click me!

Recommended Stories