புழுதி படிந்த ரோட்டில் ஜீப்புடன் த்ரிஷா..முதல் பார்வை இதோ!

Kanmani P   | Asianet News
Published : May 05, 2022, 05:15 PM IST

பிரபல நடிகை த்ரிஷா தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் the road படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

PREV
18
புழுதி படிந்த ரோட்டில் ஜீப்புடன் த்ரிஷா..முதல் பார்வை இதோ!
Trisha

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் எக்கச்சக்க ரசிகர்களை கொண்டவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் சிறு வேடத்தில் வந்த திரிஷா இப்போது முன்னணி நாயகிகளின் முக்கியமானவராக உள்ளார்

28
Trisha

லேசா லேசா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.  அஜித், விஜய் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி என முக்கிய நடிகர்களுடன் ஹிட் கொடுத்துள்ளார்.

38
Trisha

பின்னர் சாமி படத்தில் மிளகாய்ப்பொடி மாமியாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு ஜோடியா, கில்லி படத்தில் அழகான கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களை வசீகரித்த இருந்தார் திரிஷா.

48
Trisha

பின்னர் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஜானுவாக ஆக  96 படத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக மனதில் நிலையாக நின்று விட்டார்.

58
Trisha

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கட்டா மீத்தா ஹிந்தி படத்தில்சமீபத்தில் நடித்திருந்தார்.

68
TRISHA

ஆல் டைம் ஹீரோயினியாக இருக்கும் திரிஷா முன்னதாக மடலிங்கில் போது  கடந்த 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர்.

78
TRISHA

22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஜொலித்து வரும்  த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தேர்ந்தெடுத்து வருகிறார். இவருக்கு தற்போது முப்பத்தி ஒன்பது வயதாகிவிட்டது

88
TRISHA

இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கண்ட திரிஷா  புதிய படமான தி ரோட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு  படப்பிடிப்பு துவக்கம் குறித்த செய்தியை சொல்லியிருந்தார்.புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கி வரும் இதில்  திரிஷாவுக்கு ஜோடியாக ஷபீர் நடித்து வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories