ரகசிய திருமணம் செய்து கொண்ட தொகுப்பாளினி..காவலரை கரம் பிடித்தார்..

Kanmani P   | Asianet News
Published : May 05, 2022, 03:13 PM IST

ஆதித்யா தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் அகல்யா வெங்கடேசன். இவரது  திருமணம் தற்போது முடிந்துள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அகல்யா.

PREV
18
ரகசிய திருமணம் செய்து கொண்ட தொகுப்பாளினி..காவலரை கரம் பிடித்தார்..
akalya venkatesh

சமீபகாலமாக சினிமா நடிகை நடிகர்கள் போலவே தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், நடிகர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

28
akalya venkatesh

அதோடு சின்னத்திரை நட்சத்திரங்களின் காதல் கதையும், திருமணமும் சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலம். சமீபத்தில் செய்தி வாசிப்பாளர் கண்மணியின் நிச்சயதார்த்த புகைப்படம் அதிக வைரலானது.

38
akalya venkatesh

அந்த வகையில் ஆதித்யா டிவியில் தொகுப்பாளினி  மற்றும் சீரியல் நடிகையாக இருக்கும் அகல்யா வெங்கடேஷ் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

48
akalya venkatesh

நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் அகல்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி வில் நடித்து வருகிறார்.

58
akalya venkatesh

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் சில படங்களில் முக்கிய வேடத்திலும் அகல்யா நடித்துள்ளார். இவர் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசியில் நடித்திருந்தார்..

68
akalya venkatesh

2014 முதல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அகல்யா வெங்கடேசன், தேவராட்டம், ராஜவம்சம், யானை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

78
akalya venkatesh

தற்போது அகல்யா வெங்கடேசனுக்கு திருமணம் முடிந்துள்ளது. தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அருண் குமார் என்பவருடன்  இன்று திருவண்ணாமலையில் மணமுடித்துக் கொண்டார் அகல்யா.

88
akalya venkatesh

திருமண புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள அகல்யா இவர்களது திருமண வரவேற்பு வரும் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

click me!

Recommended Stories