Khatija Rahman : மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படங்கள்

Published : May 06, 2022, 08:35 AM IST

Khatija Rahman : ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமணம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்று உள்ளது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

PREV
14
Khatija Rahman : மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போது இவர் கைவசம் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயனின் அயலான், பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல், விக்ரமின் கோப்ரா ஆகிய படங்கள் உள்ளன.

24

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமீன் என்ற மகனும், ரஹீமா, கதீஜா என்கிற மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ரியாசுதீன் ஷேக் முகமது என்கிற சவுண்ட் இஞ்ஜினியரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.

34

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமணம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்று உள்ளது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதனை உறுதிப்படுத்தி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

44

கதீஜா - ரியாசுதீன் ஷேக் முகமது தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கதிஜா, ‘என் வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த நாள் இதுதான்’ என பதிவிட்டுள்ளார். மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனுக்காக தீயாய் வேலை செய்யும் ஏ.ஆர்.ரகுமான்... வீடியோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories