இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' திருப்பிடம் சுமார் 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் தற்போது உருவாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாகத்தை படக்குழு வெளியிட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒரு பக்கமும், ப்ரமோஷன் பணிகள் மற்றொரு பக்கமும் தீவிரமாக நடந்து வருகிறது.