இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சொந்த ஊரில் மருத்துவமனை கட்ட உதவியுள்ள தகவல் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவடத்தில் உள்ள நீலகண்டபுரம் தான் பிரசாந்த் நீலின் பூர்வீக கிராமம். தனது தந்தையின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றுள்ளார் பிரசாந்த் நீல்.