தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் இவர், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு சுமார் ரூ.10 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார் நயன்.
இவ்வாறு சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிசினஸிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அது எந்தெந்த தொழில்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.