தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு - நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு

First Published | Aug 17, 2022, 1:27 PM IST

jacqueline fernandez : தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள். 

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர். அவரிடம் அமலாக்கப்பிரிவினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டார்.

தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார் சுகேஷ். அதிலும் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சுகேஷ். அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் வழங்கியது விசாரணையில் அம்பலமானது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி சீசன் 3 பைனலில் தொகுப்பாளர் ரக்சன் பங்கேற்காதது ஏன்? முதல் முறையாக அவரே கூறிய தகவல்!

Tap to resize

இதையடுத்து இந்த வழக்கில் நடிகை ஜாக்குலினும் விசாரணை வளையத்திற்குள் வந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுகேஷிடம் இருந்து பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை தெரிவித்திருந்தார் ஜாக்குலின். இதையடுத்து அவருக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள் சொத்துக்களை கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கினர்.

இந்நிலையில், தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளனர். சுகேஷ் மோசடி செய்த பணத்தை அனுபவித்த குற்றத்திற்காக ஜாக்குலினின் பெயரும் தற்போது குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்தியன் தாத்தா போல் வயதான கெட்-அப்பில் கார்த்தி... வைரலாகும் விருமன் நாயகனின் வித்தியாசமான தோற்றம்

Latest Videos

click me!