இந்தியன் தாத்தா போல் வயதான கெட்-அப்பில் கார்த்தி... வைரலாகும் விருமன் நாயகனின் வித்தியாசமான தோற்றம்

First Published | Aug 17, 2022, 12:09 PM IST

Karthi : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் நான்கே நாட்களில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, நேற்று படக்குழுவினருக்கு தடபுடலாக விருந்து வைத்து சக்சஸ் பார்ட்டியை கொண்டாடினார்.

விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக தயாராகி உள்ள படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் சர்தார் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இதுதவிர லைலா, கர்ணன் பட நடிகை ரெஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஷங்கருக்கு பிறந்தநாள்! ஒருபக்கம் கமல் வாழ்த்து.. மறுபக்கம் ‘இந்தியன் 2’ அப்டேட் - டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்

Tap to resize

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று போலீஸ், மற்றொன்று வயதான கதாபாத்திரம் ஆகும். இந்நிலையில், சர்தார் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் இந்தியன் தாத்தா போல் நடிகர் கார்த்தி வாயதான கெட் அப்பில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இனி லீக் ஆக வாய்ப்பே இல்ல... படக்குழுவுக்கு இயக்குனர் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

Latest Videos

click me!