இந்தில அரச்ச மாவையே அரைக்குறாங்க... பாலிவுட்டுக்கு பளார் விட்டு கோலிவுட்டுக்கு சபாஷ் சொன்ன இந்தி பட இயக்குனர்

First Published | Aug 17, 2022, 9:28 AM IST

Anurag Kashyap : பாலிவுட்டில் அரைத்த மாவையே அரைப்பது போல், ஏற்கனவே இருக்கும் கதையைத்தான் மீண்டும் மீண்டும் எடுப்பதாக இயக்குனர் அனுராக் கஷ்யப் விமர்சித்து உள்ளார்.

பாலிவுட் திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மாலிவுட், சாண்டல்வுட் என பல்வேறு திரையுலகங்கள் இருந்தாலும், அதில் மிகவும் பெரிய திரையுலகமாக பாலிவுட் திகழ்ந்து வருகிறது. ஆண்டுக்கு பல கோடி வசூல் ஈட்டும் படங்களின் பட்டியலில் எப்போது இந்தி படங்கள் தான் டாப்பில் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. அங்கு ரிலீசாகும் படங்களில் பெரும்பாலானவை மிகப்பெரிய அளவில் ஃபிளாப் ஆகி வருகின்றன. ஆனால் மற்ற திரையுலகில் மாதத்திற்கு ஒரு ஹிட் படங்களாவது வந்துவிடுகின்றன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ரிலீசாகி வசூல் சாதனை புரிந்த பெரும்பாலான படங்கள் தென்னிந்திய படங்கள் தான்.

Tap to resize

இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது பாலிவுட். இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனராக அனுராக் கஷ்யப் தற்போது டோபாரா என்கிற இந்தி படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகையான டாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இயக்குனர் அனுராக் கஷ்யப் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட் படங்கள் தோல்வி அடைவது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இளையராஜாவிடம் சேர் வாங்ககூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த போட்டோவால் வெடித்த சர்ச்சை

இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் அரைத்த மாவையே அரைப்பது போல், ஏற்கனவே இருக்கும் கதையைத்தான் மீண்டும் மீண்டும் எடுப்பதாக கூறியுள்ள அவர், தற்போதெல்லாம் தனக்கு இந்தி படங்களை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என வெளிப்படையாக பேசி உள்ளார். அதற்கு மாற்றாக தமிழ் மற்றும் மலையாள படங்களை அதிகளவில் பார்க்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அனுராக் கஷ்யப், இங்குள்ள படங்கள் அபாரமாக உள்ளதாக பாரட்டி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் படங்களில் புதுப்புது முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறார்கள். ஆனால் இந்தியில் அவ்வாறு படமெடுக்க யாரும் மெனக்கெடுவதில்லை” என அந்த பேட்டியில் இயக்குனர் அனுராக் கஷ்யப் பேசி உள்ளார். இவர் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஹனிமூன்லாம் இல்லைங்க... விக்கி - நயனின் ஃபாரின் ட்ரிப் பின்னணியில் இருக்கும் மேட்டரே வேற..! அது என்ன தெரியுமா?

Latest Videos

click me!