இவர் நடிகையாக மட்டுமின்றி சினிமாவில் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.