மணிரத்தினம் இயக்கத்தில், மிக பிரமாண்டமாக, லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தை படக்குழுவினர், அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், மற்றும் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளியான பொன்னி நதி பாடல் கேட்கும் போதே... பொன்னியின் செல்வன் நாவல் காட்சிகளை நினைவு கூறும் விதமாக இருந்தது. இதை தொடர்ந்து அவ்வப்போது படம் குறித்த சில முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி தெலுங்கு ஆடியோ மற்றும் டிரைலர் விழா நடைபெறும் என்றும் இதில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் ஐ மேக்சில் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுளள்து. இதன் மூலம் ஐ மேக்சில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமை பொன்னியின் செல்வன் படம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாக்கூரின்... டாப் லெஸ் மற்றும் பிகினி ஹாட் போட்டோஸ்!