தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் டாப் டென்னில் இருந்தவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளிலும் கலக்கி வந்தார். தற்போது பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகள் பெற்றுள்ளார் தமன்னா.
25
Tamannaah Bhatia
இவர் இறுதியாக தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் தோன்றியிருந்தார். முன்னதாக ராஜமௌலியின் பாகுபலி பாகம் ஒன்று பாகம் 2 ஆகிய படங்களில் தமன்னாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதிலும் பாகம் ஒன்றில் பிரபாஸுடன் இவர் ஆடும் நடனம் ஒன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.
பாகுபலி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தமிழில் சூர்யா, கார்த்தி, பரத், தனுஷ், விஜய், அஜித் என முன்னணியில் இருக்கும் அனைத்து நாயகர்களுடனும் ஜோடி போட்டு விட்டார் தமன்னா. தற்போது இவர் பாப்லி பவுன்சர் என்னும் படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தோடு சேர்த்து இவர் மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகைகள் குறித்து தமன்னா பேசி இருந்தது வைரல் ஆனது. மேடையில் பேசிய தமன்னா, நாயகிகள் பேனரில் இடம்பெறுவதே பெரிய விஷயம், நாயகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை யாரும் நாயகிகளுக்கு கொடுப்பதில்லை. அதோடு பட விழாவிற்கு நடிகை வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள் என மிகவும் மன வருத்தத்துடன் பேசி இருந்தார்.
இதற்கிடையே அவர் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் தமன்னா தற்போது இறகுகள் ஒட்டிய மெல்லிய மினுமனுப்பான உடையில் முதுகு அழகை காட்டியபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.