ஹீரோவை போல் இருக்கும் மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தன்..! வைரலாகும் ரீசென்ட் போட்டோ..!

Published : Aug 17, 2022, 01:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள மணிரத்னம் மற்றும் சுஹாசினி ஆகியோரின் ஒரே மகன் நந்தனின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
ஹீரோவை போல் இருக்கும் மணிரத்னம் - சுஹாசினியின் மகன் நந்தன்..! வைரலாகும் ரீசென்ட் போட்டோ..!

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, யாராலும் எடுக்க முடியாத சவால் மிக்க கதைக்களத்தைகொண்ட , பொன்னியின் செல்வன் நாவலை தற்போது படமாக இயக்கி காட்டியுள்ளவர் இயக்குனர் மணிரத்னம். இவர் முதல் முதலில், 1983ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான' பல்லவி அனுபல்லவி' என்கிற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

25

ஆரம்பத்தில் தொடர்ந்து 4 தோல்வி படங்களை கொடுத்த இவருக்கு, 5வது திரைப்படமான, 'மௌன ராகம்' மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.  அதன்பிறகு நாயகன், ரோஜா, பாம்பே, தில் சே என தொடர்ந்து அவர் இயக்கிய அனைத்துமே... இன்று வரை ரசிகர்களால் அதிகம் ரசித்து பார்க்க கூடிய படங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

35

இவர் பிரபல நடிகை சுஹாசினியை, கடந்த 1988ம் ஆண்டு நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1992ம் ஆண்டு நந்தன் என்கிற மகனும் பிறந்தார்.

45
manirathnam

சுஹாசினி - மணிரத்னம் இருவருமே திரையுலகில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தாலும், தங்களுடைய மகனை கேமரா வெளிச்சத்தில் அதிகம் காட்டாமலேயே தற்போது வரை வளர்த்து வருகிறார்கள். தற்போது வெளிநாட்டில் படிக்கும் நந்தன், அவ்வப்போது இந்தியா வருவது வழக்கம். 

55

பார்பதற்கு ஹீரோவை போல் இருக்கும் சுஹாசினி - மணிரத்தினம் ஆகியோரின் மகன், நந்தனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories