Ponniyin selvan 1 : மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கின்றனர். இதுதவிர விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
24
லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். அதன்படி முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
கடந்த மாதம் இப்படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி என்கிற பாடல் ஆகியவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் அடங்கிய போஸ்டர்களையும் வெளியிட்டு இருந்தனர். இவை அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.
44
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும், அவர் தான் அன்றைய நிகழ்வில் பொன்னியின் செல்வன் பட டிரைலரை வெளியிட இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.