ஐடி துறையில் பணியாற்றிக்கொண்டே மாடலின் துறையில் நுழைந்து, தற்போது நடிகையாகவும் மாறி உள்ளவர் சாக்ஷி. ஆரம்பத்தில், ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த இவர், பின்னர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் இளைய மருமகளாக நடித்திருந்தார்.