பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!

Published : Jan 11, 2023, 11:20 PM ISTUpdated : Jan 12, 2023, 11:00 AM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, பிரபல தமிழ் நடிகரை காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழ வைத்துள்ளது ஐஸ்வர்யா லட்சுமியின் வைரல் பதிவு.  

PREV
16
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? நெருக்கமாக புகைப்படத்தோடு வெளியிட்ட வைரல் பதிவு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து, குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். இவரின் காந்த குரலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

 

26

ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் ஒவ்வொரு படத்திற்கும், வித்தியாசம் காட்டி வரும் அர்ஜுன் தாஸ், அட்லீ தயாரிப்பில் 'அந்தகாரம்' என்கிற படத்தில், ஹீரோவாகவும் மாறினார்.

ரஜினி, அஜித் கூட நெருங்க முடியாது? சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகர்களை மிஞ்சிய விஜய்! மிரளும் தயாரிப்பாளர்கள்!

 

36

அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், இயக்குனர் விக்னேஷ் சிவன்... அஜித்தை வைத்து இயக்க உள்ள, படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

 

46

இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறாரா என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் விதித்துள்ளது, நடிகையின் சமீபத்திய பதிவு.

'வாரிசு' படத்தின் கதையும் 'காலேஜ் ரோடு' படத்தின் கதையும் ஒன்னு தான்! புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்!

 

56

அர்ஜுன் தாசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஹார்டின் இமோஜியை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்க துவங்கி விட்டனர்.

 

66

தமிழ் திரையுலகில் பல காதல் ஜோடிகள் உருவாகி உள்ள நிலையில்... இவர்களும் உண்மையில் காதலர்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி ஹார்ட்டினுடன் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டாரா? என்பது குறித்து விரைவில் அவரே விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வாரிசு' படத்திற்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ்..! இயக்குனரின் இந்த கணக்கு சொதப்பிடுச்சோ?

 

click me!

Recommended Stories