விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று வெளியான தளபதியின் 'வாரிசு' திரைப்படம். விஜய்யின் 66 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை, தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். அதே போல் டோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு , தன்னுடைய வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய சம்பளத்தை மற்றும் தாறுமாறாக விஜய் ஏற்றி கொண்டே செல்வதற்கும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த சில தயாரிப்பாளர்கள் தங்களின் எதிர்ப்புகளை நேரடியாக வெளிக்காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. தாண்டிய அடுத்த படத்திற்கும் இதை மிஞ்சும் விதத்தில் சம்பளம் கேட்பாரா? என்பதை நினைத்தே இவரை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் மிரளுவதாக கூறப்படுகிறது.