'வாரிசு' படத்தின் வெற்றியை இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளருடன் கொண்டாடிய தளபதி விஜய்! வைரலாகும் போட்டோஸ்!

First Published | Jan 11, 2023, 9:10 PM IST

'வாரிசு' திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் வெற்றியை இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோருடன் இணைந்து கொண்டாடியுள்ளார் தளபதி விஜய். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகின் வசூல் மன்னனாக இருந்து வரும் தளபதி விஜய், தன்னுடைய 66 ஆவது படமாக  நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், இன்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் தாரை,தப்பட்டை, முழங்க  பட்டாசு... தோரணம்... என பெரிய பெரிய பேனர்கள் வைத்து தளபதியின் படத்தை பிரமாண்டமாக வரவேற்றனர்.

இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் நாள் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த வரவேற்பை... வெற்றி விழாவாக தளபதி விஜய், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

Tap to resize

இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு ஆகியோர், தளபதி விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் தற்போது வெளியாகி உள்ள, இந்த புகைப்படங்களை அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

'வாரிசு' திரைப்படம் இன்று வெளியாகி இருந்தாலும், அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை நாட்கள் வர உள்ளதால்... திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, அஜித்தை விட விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவருடைய படத்தை தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள 'வாரிசு' தமிழ் படம் இன்று வெளியானாலும், தெலுங்கு திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீரசிம்மா ரெட்டி' மற்றும் சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளதால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தளபதியின் 66 வது படமான 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Latest Videos

click me!